Published November 26, 2021 | Version 1
Journal article Open

மாலதி மைத்ரி கவிதைகளில் பெண்மையின் பிம்பங்கள் /Images of Femininity in Malathi Maithri Poems

  • 1. Assistant Professor, Tamil Research Centre, S.T. Hindu College, Nagercoil – 02.

Description

இறைவன் படைப்பில் ஆண் பெண் நிகரென்று கூறும் உலகில் பெண்களுக்கு மட்டும் உளப்பூர்வமான இட ஒதுக்கல் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. பண்டைய காலத்தில் இருந்த தாய்வழிச் சமூக அமைப்பு நிலை தேய்ந்து தந்தைவழிச் சமூக அமைப்பு தோன்றிய காலம் முதலாகவே பெண் விடுதலை எனும் கருத்தாக்கம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. பெண் என்பவள் செயலற்றவள் என்ற ஆணின் புனைவை மறுத்து, ஆண் நிகழ்த்தும் வன்முறைகளை எதிர்த்து நிற்கும் ஆற்றல்மிக்கவளாக பெண் தன்னை உருமாற்றிக் கொள்ள வேண்டும். பெண் மென்மையானவள் என்பது காலங்காலமாக சொல்லிக் கொண்டிருக்கும் பொய்யான வார்த்தையே. பிரச்சனைகளை எதிர் கொள்வதில் ஆணை விட பெண்ணுக்கே வலிமை அதிகம். பெண்ணின் உற்பத்தி ஆற்றல் பூமியின் இயற்கை வளத்தை போன்றது. இந்த ஆற்றல் பூமியில் பெண்ணின் இருப்பு நிலையானது என்பதை காட்டுகிறது. பெண் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஆணாதிக்கச் சமூகம் கட்டமைத்த பெண்ணுக்கான வரையறைகளைத் தகர்த்து பெண்மையின் புதிய பிம்பத்தை காட்சிப்படுத்துவதாக மாலதி மைத்ரியின் கவிதைகள் அமைந்துள்ளன.

Files

2. Benny..pdf

Files (628.2 kB)

Name Size Download all
md5:224cd5aea2201c26d69fefdd54a77689
628.2 kB Preview Download