க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்சார் வழிகாட்டலின் வினைத்திறனின்மையானது, அவர்களின் எதிர்கால செயற்பாடுகளில் ஏற்படுத்தும் தாக்கம் The Impact on the G.C.E A/L students due to lack of guidance on professional skills
- 1. ஆசிரியர், மமா/வ/அருணோதயா இந்து கல்லூரி, குருந்தோயா, கந்தபளை, இலங்கை. Teacher, Cp/W/Arunodhaya Hindu College, Kurundhoya, Kandapola, Sri Lanka.
Description
ஆய்வுச் சுருக்கம்
"க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான தொழில்சார் வழிகாட்டலின் வினைத்திறனின்மையானது, அவர்களின் எதிர்காலச் செயல்பாடுகளில் ஏற்படுத்தும் தாக்கம்" என்ற பொருண்மையில் வலப்பனை கல்வி வலய தமிழ்மொழி மூல 1AB, 1C பாடசாலைகளை மையமாகக் கொண்டு ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது. க.பொ.த. உயர்தரக் கல்வி நிறைவின் பின்னர், கல்வியைத் தொடந்து செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் பல மாணவர்களின் தொழில் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. மாணவர்களின் உயர்தரக் கல்வியின் பின்னரான தொழில் வாழ்க்கையானது, மாணவர்களின் இரண்டாம் நிலைக் கல்வியிலேயே தங்கியுள்ளது.
ஆய்வுத் தலைப்பின் அருஞ்சொற்களாகிய வினைத்திறனின்மை, தொழில்சார் வழிகாட்டல், மாணவர்களின் எதிர்காலச் செயல்பாடுகள், க.பொ.த. உயர்தர மாணவர்கள் போன்றவற்றின் பல்வேறு தேடல்களின் தொகுப்பான இலக்கிய மீளாய்வு ஆய்வுக்கு வலுச் சேர்க்கின்றது.
ஆய்வுக்காக வலப்பனை கல்வி வலயத்தின் நான்கு தமிழ்மொழி மூல க.பொ.த. உயர்தர பாடசாலைகளும் தெரிவுசெய்யப்படுகின்றன. ஆய்வுப் பிரச்சினையை உறுதிப்படுத்தும் தரவுத் தேடல்களுக்காக நோக்க மாதிரிகளின் அடிப்படையில் பாடசாலைகள், தரம் 12, தரம் 13 வகுப்புக்கள் மற்றும் அதிபர்கள், தொழில் வழிகாட்டல் ஆலோசகர்கள் ஆகியோர் நோக்க மாதிரி அடிப்படையில் தெரிவுசெய்யப் படுகின்றனர். மாணவர் தெரிவானது, 662 மாணவர்களுள் 150 மாணவர்கள் இலகு எழுமாற்று மாதிரிகளாக தெரிவுசெய்யப் படுகின்றனர். அதில் கல்வி கற்கும் 323 மாணவர்களிலிருந்து 50 மாணவர்களும் விடுகைப்பெற்ற 339 மாணவர்களிலிருந்து 100 மாணவர்களும் தெரிவு செய்யப்படுகின்றனர். இம்மாணவர் தெரிவானது க.பொ.த உயர்தரக் கல்வியை நிறைவு செய்த மாணவர்களில் 50 மாணவர்களும், க.பொ.த உயர்தரக் கல்வியை நிறைவு செய்த மாணவர்களில் 50 மாணவர்களும் உள்ளடங்களாக 100 மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
மாதிரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் அளவுசார் மற்றும் பண்புசார் முறைகளில் பொருத்தமான மென்பொருள் முறைமைகளினூடாக பகுப்பாய்வு, கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படுகின்றன. பகுப்பாய்வினூடாக பல்வேறு முடிவுகளைக் கண்டறிய முடிகின்றது. பாடசாலை மட்டங்களில் தொழில் வழிகாட்டல் ஆலோசனைச் சேவையின் மந்தகரமான இயக்கம், மாணவர் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் வழங்காமை, திருப்தியற்ற மாணவர் ஒத்துழைப்புகள், தொழில் வழிகாட்டலில் புதிய விடயங்களை உள்வாங்காமை, பகுதிநேர தொழில் வழிகாட்டல் செயற்பாடுகள் இடம்பெறாமை, மாணவர்கள் தாம் கற்கும் காலங்களில் தொழில்சார் தகைமைகளை வளர்ப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படாமை, நிபுணத்துவமிக்க மனித வளங்களை தொழில் வழிகாட்டலில் எதிர்பார்க்கின்றமை போன்ற முடிவுகளைக் கண்டறிய முடிகிறது. இதனைத் தொடர்ந்து, பாடசாலை மட்டங்களில் வினைத்திறனான தொழில் வழிகாட்டல் முன்னெடுப்புகளுக்கான விதந்துரைப்புகளும் எடுத்தியம்பப்படுகி ன்றன.
Abstract
The study is focused on the theme "The Impact on G.C.E A/L Students due to the Lack of Guidance on Professional Skills," specifically examining Tamil medium 1AB and 1C schools in the Walapana Education Zone. The low number of students pursuing education beyond the G.C.E Advanced Level is a concern, potentially affecting the professional lives of many students. The professional trajectories of these students post-higher education hinge on the quality of their secondary education. A comprehensive literature review on topics such as unemployment, career guidance, future activities of students, and higher education further fortifies the research.
To address the research issue, four Tamil medium G.C.E Advanced Level high schools in the Walapane education zone are selected for the study. Data collection involves purposive sampling of schools, grade 12 and grade 13 classes, principals, and career guidance counsellors. Out of 662 students, 150 are selected for the study, including 50 from a pool of 323 current students and 100 from a pool of 339 former students who have completed G.C.E Advanced Level education. Quantitative and qualitative methods are employed to analyze, interpret, and discuss the collected data through appropriate software systems.
The analysis may reveal insights into the slow implementation of career guidance counselling services at school levels, a lack of emphasis on student preferences, suboptimal student collaborations, inadequate incorporation of new issues in career guidance, a dearth of part-time career guidance activities, limited opportunities for students to develop professional skills during their learning, and an expectation for professional human resources in career guidance. Subsequently, recommendations are proposed for enhancing effective career guidance initiatives at the school level.
Files
4.Deivendran_32-42.pdf
Files
(573.4 kB)
Name | Size | Download all |
---|---|---|
md5:7cd25115ae0f0bbf6679efc9671ec101
|
573.4 kB | Preview Download |
Additional details
References
- அருள்மொழி,செ.(2008). கல்வி ஆய்வு முறைகள், ராஜா புத்தக இல்லம், மட்டக்களப்பு இலங்கை.
- கணபதி,க.(1993). கல்வி மனவியல் துணைகள், சங்கர் பிரிண்டர்ஸ், சென்னை 600042.
- சந்தானம்,எஸ். உம் கணபதி,வி.(2002). கல்விசார் அறைகூவல்கள், சாந்தா பப்ளிசர்ஸ், சென்னை.
- சந்திரசேகரன்,சோ.(2008). சமகாலக் கல்வி முறைகளின் சில பரிமாணங்கள், சேமமடு பதிப்பகம், யாழ்ப்பாணம், இலங்கை.
- சந்திரசேகரன்,சோ.(2004). கல்வி – ஒரு பன்முகநோக்கு, உமா பதிப்பகம், மட்டக்களப்பு, இலங்கை.
- சிவானந்தன்,ப.(2011). பாடசாலை தொழில்சார் வழிகாட்டல் – ஆசிரியம், சி.பி.சி பிரஷ, கொழும்பு, இலங்கை.
- சின்னத்தம்பி,மா.(2008). பாடசாலையும் சமூகமும், குமரன் புத்தக இல்லம். கொழும்பு, இலங்கை.
- சின்னத்தம்பி,மா.(2007). கல்வியின் பொருளியல், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, இலங்கை.
- சிவநடேஸ்,செ.(2006). பாடசாலை அபிவிருத்தி, கல்விச்சங்கம், கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு இலங்கை.
- சின்னத்தம்பி,மா.(2005). இலங்கையின் கல்விச்செலவு, விஸ்டம் பப்ளிகேசன்ஸ், மட்டக்களப்பு இலங்கை.
- வல்வை ஆனந்தராஜ்,ந.(2005). தேசியத்தை நோக்கிய கல்வி, நந்தி பதிப்பகம், இலங்கை.
- கிருஷ்ணபிள்ளை,வி.(2009). வழிகாட்டலும் ஆலோசனையும், சேமமடு பதிப்பகம், யாழ்ப்பாணம், இலங்கை.
- கிருஷ்ணபிள்ளை,வி.(2001). வழிகாட்டலும் ஆலோசனையும், கே.எஸ்.யூ கிராப்பிக்ஷ், இலங்கை.
- ஜெயராசா,சபா.(2011). கல்வியில் தொடர் தொழில் வழிகாட்டல், சேமமடு பதிப்பகம், யாழ்ப்பாணம், இலங்கை.
- ஜெயராசா,ச. உம் சந்திரசேகரன்,சோ.(2009). கல்வியலும் நிகழ்பதிவுகளும் , யாழ்ப்பாணம், இலங்கை.
- ஜெயராசா,ச.(2007). கலைத்திட்டம், அகவிழி வெளியீடு, இலங்கை.
- ஜெயராசா,சபா.(2006). கல்வியில் புதிய சீர்திருத்தங்கள், அகவிழி, கொழும்பு, இலங்கை.
- ஜெயசாரா,சபா.(2002). கல்வி ஆய்வு முறையியல், யாழ்ப்பாண கல்வி ஆய்வு கழகம். இலங்கை.
- ஜெயராசா,ச.(2001). கல்விச் சீர்மியம், போஸ்கோ வெளியீடு, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை.
- Ministry of Human Resource Development. (2000). Education for All National Action, Ministry of Education, Sri Lanka.
- Trochim, M.K. (2002). Research Methods Knowledge Base, Cornell University. Newyork.
- Mathewson, R. H. (1962). Guidance Policy and Practice, New York: Harper and Row Publishers.
- கல்வி வழிகாட்டலும் ஆலோசனை கூறலும், (2010). தொகுதி (1) இலங்கை திறந்த பல்கலைக்கழகம், இலங்கை.
- கமலநாதன்,தி.(2005). இடைநிலைப்பாடசாலைகளில் வழிகாட்டல் ஆலோசனைச் சேவை, அகவிழி வெளியீடு, இலங்கை.
- சிவானந்தன்,ப.(2012). பாடசாலை தொழில்சார் வழிகாட்டல், ஆசிரியம் வெளியீடு, இலங்கை.
- சின்னத்தம்பி,மா.(ஜனவரி 2006). பாடசாலைகளில் வழிகாட்டல் புதிய தேவை, அகவிழி வெளியீடு, இலங்கை.
- பகிரதன்,ச.(2015). தொழில்வாண்மை உளவளத்துணை கற்கை நெறி, வீரகேசரி வார இதழ் இலங்கை.
- நிரேஷ்குமார்,ம.(2007). இன்றைய காலத்தின் தேவை தொழில்சார் கல்வி, அகவிழி வெளியீடு, இலங்கை.
- https://www.facebook.com/notes/10151201619429671/masihudeen inaamullaha