ஐங்குறுநூற்று மருதப் பாடல்களும் நிலவியலும்
Authors/Creators
Contributors
Researcher:
Description
பண்டையத் தமிழர் தங்கள் வாழ்வியல் முறைகளை நிலம் சார்ந்தும் சூழ்நிலை சார்ந்து அமைத்துக் கொண்டுள்ளனர். உலகில் பல வாழ்வியல் முறைகள் இருந்தாலும் இலக்கியப் பாடுபொருளுக்கென்று சில வரையறைகள் வேண்டும் என்ற எண்ணம் தமிழ்ப் புலவர்களிடத்தே இருந்துள்ளது. உலகியல் வாழ்க்கையை இலக்கியத்தில் எடுத்தாண்டு பாடுகிற போது சில கட்டுப்பாடுகளை வகுத்துப் பாடும் பொருட்டுச் செய்து கொண்ட ஏற்பாடே திணைக் கோட்பாடாகும். தொல்காப்பியம் அகத்திணைக் கூறுகளாக முதல், கரு, உரி என்ற முப்பொருள்களை முன்வைக்கின்றது. இதில் முதற்பொருள் என்பது நிலமும் பொழுதுமாகும். மனித ஒழுக்கலாறுகள் நிகழ்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது நிலமே. அந்தந்த நிலத்தின் இயல்புகளுக்கு அமைய மக்களின் வாழ்க்கை முறை அமைந்திருந்துள்ளதைச் சங்க அகப்பாடல்கள் வழி அறிய முடிகின்றது. மருதநிலத்தின் இயல்பு அந்நில மக்களின் வாழ்வியல் சூழலையும், வளமிக்க வாழ்வையும் தீர்மானித்துள்ளன.