செங்காந்தள் - யோகா / Chenkaantal - Yoga
Description
முனைவர் மா. தே. அருண்மொழி நங்கை அவர்கள் எழுதியுள்ள “வாழ்க்கைத் துணை யோகா” என்னும் தலைப்பிலான கட்டுரை யோகா என்பது என்ன அது வாழ்க்கையோடு எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகிறது யோகாசனம் செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன உடற்பயிற்சிக்கும் யோகாவிற்கு உள்ள வேறுபாடு என்ன யோகா பயிற்சி செய்வதால் உடல் மற்றும் மன நோய்கள் எவ்வாறு தீர்க்கப்படுகிறது யோக முடிச்சுகள், யோக முத்திரைகள் உடலில் எங்கு எங்கு அமைந்துள்ளன என்பன பற்றிய தகவல்களை நமக்கு அள்ளித் தருவதாக அமைந்துள்ளது.
முனைவர் நா. சொ. அபிதா அவர்கள் எழுதியுள்ள “யோகாவும் வாழ்வியலும்” என்னும் கட்டுரையானது தொடக்க காலத்தில் யோகா எவ்வாறு வாழ்வியலோடு இணைந்த ஒன்றாக காணப்பட்டது; யோகாசனங்களின் சான்றாகக் கிடைக்கப்பெற்ற சுடுமண் முத்திரைகளின் விளக்கம், பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட யோகாசனத்தின் அடிப்படை, உடல்நலம் போற்றுவதற்கு யோகா எவ்வாறு பயன்படுகிறது என்பன போன்ற செய்திகளை பறைசாற்றுகின்றது.
பேராசிரியை அனுஷா அவர்கள் எழுதியுள்ள கட்டுரை மன ஆரோக்கியம் மற்றும் கவனயீர்ப்புக்கு யோகா துணை புரியும் என்னும் பொருண்மையில் அமைந்துள்ளது. கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வாறு யோகாவை கையாள்வது; பருவத்தின் அடிப்படையில் கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் ஆசனங்கள் எவை; அவற்றைச் செய்வதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பதை தெளிவுபடுத்துவதாய் காணப்படுகிறது.
பேராசிரியை அனிகோ மெர்ஜோரா அவர்கள் எழுதியுள்ள கட்டுரைசெயற்கை நுண்ணறிவு கோலோச்சியுள்ள இன்றையஉலகில் யோகாவின் பயன்பாடு என்ன என்பது பற்றி அமைந்துள்ளது. யோகாசனத்தை செயற்கை நுண்ணறிவு உதவியோடு எவ்வாறு பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது; அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்கான ஒரு விளக்கமாகஇக்கட்டுரை அமைந்துள்ளது.
Files
Chenkaantal - Yoga Full Book_com..pdf
Files
(557.9 kB)
| Name | Size | Download all |
|---|---|---|
|
md5:b2fe5a1a9350d145358e08173d0644bf
|
557.9 kB | Preview Download |