Published October 14, 2025 | Version v1

பறம்பின் விருந்தோம்பல்

Description

உலகில் வேறு எங்கும் காண இயலாத உயர்ந்த பண்புகளில் ஒன்று தமிழர்களின் அடையாளமாக இருக்கிறது என்றால் அது விருந்தோம்பல் என்ற வாழ்வியல் பண்பாகும். விருந்தினர்கள் முகம் மலர்வதைக் கண்டு அகம் மகிழ்ந்தவர்கள் நம் தமிழர்கள். வறுமையிலும் கூட ஒரு பகுதி தானியத்தைப் பயன்படுத்தாமல் பாதுகாத்து வைத்து திடீரென்று வரும் வழிப்போக்கர்களுக்கும் விருந்தினர்களுக்கும் விருந்து படைத்திடும் போற்றுதற்குரிய பழக்கம் கொண்ட இனம் நம் தமிழினம். மண்ணை ஆளும் மன்னனாக இருந்தாலும் சரி, உழைத்து வாழும் பாட்டாளி  மக்களாக இருந்தாலும் சரி, வறுமையில் வாடினாலும் “பகுத்துண்டு வாழ்வதே வாழ்வு” என முன்னிறுத்தியதால்தான் தமிழர்களின்
வாழ்வியல் முறை உலகில் சிறந்த வாழ்வியலாக திகழ்கின்றது. அத்தகைய உயர்ந்த வாழ்வியலான விருந்தோம்பலை வேள்பாரி நாவலில் பறம்பு மலையில் வாழும் மக்களிடையே நிறைந்துள்ள சிலவற்றைக் இக்கட்டுரை விளக்குகிறது. 

Files

58-63.pdf

Files (537.4 kB)

Name Size
md5:0cc992043930a01400afce8563e4a4f3
537.4 kB Preview Download