சு. வெங்கடேசனின் வேள்பாரி புதினத்தில் விருந்தோம்பல் உணவுகள்
Authors/Creators
Description
விருந்தோம்பல் என்பது ஒரு விருந்தினர் மற்றும் அவரது புரவலர் ஆகிய இருவருக்கும் இடையிலான உறவு அல்லது ஆதரிக்கும் குணத்தை குறிப்பிடுவதாகும். மனிதர்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் துயர்களைய உதவிப்புரிதலும் விருந்தோம்பலாகவே மதிக்கப்படுகிறது. இத்தகைய விருந்தோம்பல் பண்பினுள் அளவளாவுதல் செல்வங்களை வாரி வழங்குதல் புதிய உடைகளை வழங்குதல் முதலியன இடம்பெறுகின்றன. எனினும் அவற்றுள் முதன்மை பெறுவது இரவலர்க்கு உணவளிக்கும் செயலாகும். மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளுள் முதலிடம்பெறும் உணவினை இரந்துவருபவர்களுக்கு வழங்குதலை பண்டைத் தமிழர் விருந்தோம்பல் நெறிமுறையாக மட்டுமின்றி தம் கடமையாகவும் மேற்கொண்டனர். இதற்குச் சான்றாக சங்க இலக்கிய ஆற்றுப்படை இலக்கியங்கள் அனைத்தும் இரவலர்களுக்கு புரவலர்கள் அளித்த விருந்தோம்பலில் உணவிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளதைறலாம். சங்ககால வள்ளல்களில் ஒருவனான பாரியின் செய்திகளை தனது கதையமைப்பாக கொண்டமைந்துள்ள வீரயுக நாயகன் வேள்பாரி புதினத்திலும் விருந்தோம்பலில் இடம்பெறும் உணவுகளை பற்றிய செய்திகள் புனைவுகளோடு சித்திரிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்து வேள்பாரி புதினத்தில் இடம்பெறும் உணவுகளுள் விருந்தோம்பல் உணவுகளையும் அவற்றினால் வெளிப்படும் பாத்திரங்களின் அகஉணர்வுகளையும் வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Files
33-40.pdf
Files
(494.2 kB)
| Name | Size | Download all |
|---|---|---|
|
md5:43fdd38534f99dd508ae36e7cdf3e21c
|
494.2 kB | Preview Download |