Published October 14, 2025 | Version v1

வீரயுக நாயகன் வேள்பாரியில் சங்க இலக்கிய காட்சிகள்

Description

நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச் சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பிறங்குவெள்ளருவி வீழுஞ்    சாரற் பறம்பிற் கோமான்    பாரி & சிறுபாணாற்றுப்    படை:(88&91) எனப் போற்றப்படும் கடையேழு வள்ளல்களுள் தலைசிறந்த பாரி வள்ளலை, முடிவுடை மூவேந்தர்களால்  வெற்றி கொள்ள இயலாது சூழ்ச்சியால் கொள்ளப்பட்டான் என    நம்  சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்து இயம்புகின்றன. இச்செ#திகளின் அடிப்படையில் பல்வேறு கள ஆ#வுகளை மேற்கொண்டு வீரயுக நாயகன் வேள்பாரி எனும் மாபெரும்  வரலாற்றுப் புனைவினைத்    திரு.சு.வெங்கடேசன்    அவர்கள்    தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு  அளித்துள்ளார். அப்புனைவினுள் உள்  நுழைய நுழைய எண்ணற்ற அறிவுப்  புதையல்களை நம்மால்    கண்டெடுக்க    முடிகிறது.  இந்நாவலின் சிறப்பு கதை சொல்லும் உத்தியிலா;  சொல்லோவியமாக தீட்டிக் காட்சிப் படுத்தும் முறையிலா; ஆறுகளுக்குள் கிளைத்தோடும் சிற்றாறுகளென கதைக்குள் பலகிளைக் கதைகள் கிளைத்தோடும் அழகிலா; கதைகளில் சொல்லப்படும் வரலாற்றுச் செரிவுகளிலா;  பல்லுயிரிகளைப்     பகுத்தும்     தொகுத்தும்     சொல்லும் நெறியிலா; வானியல், மருத்துவம், விவசாயம், போர்முறை     எனப்    பல்துறை  அறிவுப் பெருகத்திலா எனப் பிரித்தறிய முடியாத நிலையில் உயர்ந்தோங்கும் வீரயுக     நாயகன் வேள்பாரியில் நான் கண்ட சங்க இலக்கியக் காட்சிகளை ஆ#வதாக இக்கட்டுரை   அமைகின்றது.

Files

12-14.pdf

Files (501.1 kB)

Name Size Download all
md5:8ebffabefd093db044e7dbb856bff973
501.1 kB Preview Download