Published August 22, 2025 | Version v1
Journal article Open

இராமநாதபுரம் மாவட்ட வரலாறு

Description

மாவட்ட     அறிமுகம்     என்னும்     இக்கட்டுரை     இராமநாதபுரம்    மாவட்ட     தோற்றம்     பற்றிய     செ#திகளோடு, பரப்பளவு, மக்கள்    தொகை, இயற்கை     அமைப்பு, பயிர்     வகைகள், இவப்பாகுபாடுகள், மொழி, தொழில் போக்ருவரத்து, கல்வி     சமயநிலை, வரலாற்றுச்    சிறப்பு    போன்ற  பல  கூறுகளை ஆ#வு     செ#யும்விதமாக     அமைந்துமுன்பு    தென் மாவட்டங்களில் இராமநாதபுரம்     மாவட்டம்     மிகப்    பெரிய    மாவட்டமாகும்.    இப்பகுதிகள் பாண்டியர்களாலும், பிற்கால    நாயக்கர்கள், மற்றும்    சேதுபதிகளாலும்    ஆளப்பெற்றன. சில  ஆண்டுகருக்கு    முன்     வரை     இராமநாதபுரம்     ஜமின்     தமிழகத்திலேயே மிகப்    பெரிய     ஒன்றாக     இருந்தது.     இதன்     பரப்பு     சுமார்     2014     சதுரமைல்    ஆகும்.  இதனைச்     “சேதுநாடு”     எனவும்     “மறவர்     நாடு”     எனவும்   அழைப்பர்.     சேதுநாட்டில்     உண்டான     உள்     நாட்டுக்     கழகத்“தின்    விளைவாக     இந்நாடு  கி.பி.  1730-இல்     பெரிய     மறவர்நாடு, சிறிய    மறவர்நாடு     என     இரண்டாகப்     பிளவுபட்டது.     இவற்றில்     முன்னது  இராமநாதபுரம்     பகுதியையும்.     பின்னது     சிவகங்கைப்     பகுதியையும்    குறிக்கும்.  சேரபதிகள்    கி.பி.    1604    முதல்    1910    வறை    இப்பகுதிகளை    ஆண்டதாக     வரலாறு     கூறுகின்றது. ”1     “சேது”     என்பது     “கடல்”     எனப்    பொருள்படும்.     மேலும்     இலங்கை     செல்வதற்காக     இராமன்     கட்டிய    அணைக்குச்     “சேது”     எனவும்     குறிப்படுவர்.     இதனை அடியொட்டிச்    சேதுபதி     என்றும்     சிறப்புப்     பெயர்     எழுந்தது.     சேதுபதி     அரசர்கள்    
இராமேஸ்வரம்     தீவைக்     காக்கின்ற     பொறுப்பை     வகித்தவர்கள்.    அவர்களுக்குச்     சேதுபதி     காவலர்     என்றும்     சேதுபதி     காத்ததேவர்    என்றும்    பட்டங்கள்    உண்டு.
இராமநாதபுரம்     மாவட்டம்     அரசிதழ்படி     1803&     இல்    இராமநாதபுரம்     ஜில்லாவில்     இராமநாட்     ஜமின்,  சிவகங்கை, மதுரை, திண்டுக்கல்     மாவட்டக்களும்     திருநெல்வேலி     ஜமினும்    அடக்கியிருந்தன.     1876 & 78, பஞ்சத்துக்குப்     பிறகு.     நிர்வாகம்    செ#ய     சிறிய     பகுதிகளாக     இருப்பது     சௌகரியமாக     இருக்கும்     என    ஆங்கிலேயர்    கருதினர்.  இதன்படி     1904 ல்     சர்வில்லியம்     மேயர்    அளித்த     அறிக்கையில்     இராமநாதபுரம்ஶீ  சாத்தூர்     அடங்கிய     இராமநாதபுரம்    மாவட்டத்தை     உருவாக்கப்     பரிந்துரை    செ#தார்.     1910     &     ஜூன்     மாதம்     இந்த    யோசனை     உருப்பெற்றது என    இராமநாதபுரம்     மாவட்ட  வரவாற்று    நிபுணர்    மீ.மனோகரன்    கூறுகிறார். இவ்வாறு     பாகுபாடு     செய்த  இம்மாவட்டம்     1910     ஆம்     ஆண்டு    முதல்     அந்நாளில்     இருந்த     வசதிகளைக்    கருத்தில்  கொண்டு    மதுரையே    தலைநகராய்  அமைந்தது.     இந்நிலை     கடந்த     75    ஆடுகளாய்த்     தொடர்ந்தது.     மாவட்ட   ஆட்சியர்    அலுவலகம்    உள்ளிட்ட    பல்வேறு    முக்கிய     அலுவலகங்கள்     மதுரையிலேயே    செயல்பட்டன.     பரந்து     விரிந்து     கிடந்த   இம்மாவட்டத்தின்     நிர்வாக     நலன்    சீர்படவேண்டும்     என்ற     கருத்தில்     1984 ஆம்    ஆண்டு    தமிழக    அரசால்    மேலும்  மூன்று    மாவட்டங்களாகப்    பிரிக்கப்பட்டது. விருதுநகரைத்     தலைநகராகக்     கொண்டு காமராஜர்    மாவட்டம், இராமநாதபுரத்தைத்   தலைநகராகக்     கொண்டு     இராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கையைத்    தலைநகராகக்    கொண்டு     பசும்பொன்    முத்துராமலிங்கம்    மாவட்டம்     என்ற     மூன்று     மாவட்டங்கள்    உதயமாயின.     இந்தப்     புதிய     மாவட்டங்களில்     அமைப்புப்     பணிகளைத்     தமிழக    முதல்வர்    மாண்புமிகு  எம்.ஜி. ராமச்சந்திரன்    அவர்கள்     1984 ஆம்     ஆண்டு     ஜூலை     15, 16 மற்றும்     17     ஆகிய     தேதிகளில்     துவக்கி    வைத்தார்.இவ்வாறு     தமிழக     அரசினால்    புதிதாகப்     பிரிக்கப்பட்ட  இராமநாதபுரம்    மாவட்டம்     பற்றிய     பல்லேறு     செய்திகளை    இக்கட்டுரை    அறிமுகம்    செய்கிறது.

Files

71-77.pdf

Files (273.9 kB)

Name Size Download all
md5:0ccc73062731200d94c8cade4bacb328
273.9 kB Preview Download