அறிவியலின் தாக்கமும், சங்ககாலமும்
Authors/Creators
Description
தமிழரின் முதன்மையான அடையாளம் இலக்கணமும் இலக்கியமும். இவ்விரண்டும் தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் இருகண்களாய் நேற்றும், இன்றும், என்றும் திகழ்வன என்பதில் ஐயமில்லை. இவ்விலக்கண இலக்கியங்களில் தமிழரின் பண்டைய வாழ்வியல் தொடர்பான பல்வேறு கோட்பாடுகளும், செய்திகளும் பரந்து காணப்படுகின்றன. அவற்றோடு, அறிவியல் சிந்தனைகளும் வேரூன்றி நிற்பதைக் காணமுடிகிறது. வேறு எந்த மொழிக்கும். இல்லாத அறிவியற் சிந்தனைகள் தமிழ்மொழியில் மட்டும் இலக்கணத்திலும் இலக்கியத்திலும் பொதிந்து காணப்படுகின்றன. இக்கட்டுரை சங்க இலக்கியங்களில் மட்டும் காணப்படும் அறிவியல் சிந்தனைகளை விளக்குகின்றன. இலக்கியத்தில் அறிவியல் என்பது உவமமாகவும் உள்ளுறையாகவும் நிகழ்ச்சிக்கு நிலைக்களனாகவும், கருப்பொருளாகவும் வெளிப்பட்டும் காணப்படுகின்றன.