யாப்பிலக்கணம் கற்பித்தல் தொழில்நுட்பம் அன்றும் இன்றும்
Authors/Creators
Contributors
Researcher:
Description
மொழியின் அமைப்பையும் பயன்பாட்டையும் உரைக்கும் பகுதி இலக்கணமாகும். தமிழ் இலக்கணம் தொன்மை உடையது. வளம் உடையது. நுட்பமுடையது. தமிழில் கிடைத்த முதல் நூல் தொல்காப்பியம். இது மூன்று இலக்கணம் கூறும் நூலாகும். இன்று கற்பிக்கப்பட்டும் கற்கப்பட்டும் வருகிறது. இவ்விலக்கணம் பிற்காலத்தில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கணமாக வளர்ச்சியுற்று இன்று கற்பிக்கப்பட்டும் கற்கப்பட்டும் வருகிறது. இவ்விலக்கணங்கள் இடைநிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி வகுப்புகளில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இன்றைய நிலையில் கல்வியியல் நுட்பங்கள் இத்துறையில் வளர்ந்து வருகின்றன. தமிழ் இலக்கணங்கள் கற்பித்தலில் அன்றும் இன்றும் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்திக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களின் புரிந்துணர்வு திறன் மேம்படும். எனவே இன்றைய நிலையில் தமிழ் இலக்கணம் கற்பித்தலில் புதிய தொழில்நுட்பங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிற காரணத்தால் இவற்றை அறிந்துணர்வது அவசியம் என்கிற நிலையில் இக்கட்டுரை மேற்கொள்ளப் பட்டுள்ளது.