Published April 19, 2023 | Version v1

திருக்குறளில் நட்பாளுமை

Authors/Creators

Description

உலக சமூக வரலாற்றை உற்று நோக்கும் போது, நட்பிற்கு தனிச்சிறப்பு இருப்பதைக் காண முடிகிறது. நமது நாட்டு இதிகாசமான மகாபாரத்தில் துரியோதனன் – கர்ணன் இடையேயான நட்பு. சங்க இலக்கியத்தில் கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு, பாரி – கபிலர், அதியமான் – ஔவையார் நட்பு இப்படி கணக்கெடுத்தால் நட்புப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். நட்பினால் வாழ்வில் ஏற்றம் பெற்றவரும் உண்டு, இறக்கம் பெற்றவரும் உண்டு. பல அறிஞர் பெருமக்கள் நட்பு தொடர்பான பல கருத்துக்களை, வரையறைகளை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் திருவள்ளுவப் பெருந்தகை நட்பு பற்றியச் சிந்தனையை எப்படி வெளிப்படுத்தியுள்ளார் என்பதை சமூகவியல் நோக்கில் ஆராய்வது இவ்வாய்வுக் கட்டுரையின்  நோக்கமாக அமைகிறது.

Files

Document 25 (1).pdf

Files (2.8 MB)

Name Size
md5:eea3a7f8c04dd0f23eef96063614c556
2.8 MB Preview Download