அருணாசலக்கவியின் இராமநாடகக்கீர்த்தனை: Ramanataka keertana of Arunachalakavi
Description
இயல்¸ இசை நயம்மிக்க இசை நாடகமென்னும் பிரிவில் மெலோங்கிப்பல காலமாக எல்லோராலும் போற்றப்பட்டும்¸ மேடைகளில் நாட்டிய நாடகமாகவும்¸ இசைக்கச்சேரிகளில் தனிப்பாடல்களாகவும் அரங்கேற்றப்பட்ட ஒரு இசை நாடகம் அருணாசலக்கவிராயரின் இராமநாடகக்கீர்த்தனை. இராமநாடகக் கீர்த்தனையில் உள்ள இசைப்பாடல்கள் வௌ;வேறு வகையினைச் சேர்ந்தனவானாலும் இராமருடைய புகழைப்பாடுவதனால் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நாடகக்கீர்த்தனை என்றே பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இராம நாடகக் கீர்த்தனைகளில் அருணாசலக்கவிராயர் கையாண்டுள்ள இசைப்பாடல்கள் வகைகள் பற்றியும் பின்னர் எழுந்த இசை நாடகங்களுக்கு அருணாசலக்கவிராயர் முன்னோடியாக விளங்கியமை குறித்தும் விளக்குவதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.