Published February 28, 2026 | Version v1
Journal article Open

தொல்காப்பிய மொழிமுதல் எழுத்துகளும் ஐங்குறுநூறும்

  • 1. Assistant Professor of Tamil, Syed Ammal Arts and Science College, Pullangudi, Ramanathapuram – 623 513, virugodwin3@gmail.com

Description

தொல்காப்பியம் செய்யுளியலை அடிப்படையாகக் கொண்ட இலக்கணமாக இருப்பினும், மொழியின் அடிப்படை அலகுகளான எழுத்துப்பிறப்பு முதல் சொல் மற்றும் தொடர் உருவாக்கம் வரையிலான விதிகளைத் துல்லியமாக வரையறுக்கிறது. குறிப்பாக, ஒரு சொல்லின் முதலிலும் ஈற்றிலும் வரும் உயிரெழுத்துகள் மற்றும் மெய்யெழுத்துகள் குறித்த தொல்காப்பியரின் விதிகள் தமிழ்மொழி வரலாற்றில் மிக முக்கியமானவை. இக்கட்டுரை, தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் கூறப்பட்டுள்ள 'மொழிமுதல் எழுத்து' விதிகளை, சங்க இலக்கியத் தொகுப்பான ஐங்குறுநூற்றின் மருதத்திணைப் பாடல்களுடன் பொருத்தி ஆராய்கிறது. பழந்தமிழ் அகநூல்களில் முதன்முதலில் தொகுக்கப்பட்ட சிறப்பினை உடைய ஐங்குறுநூற்றுத் தரவுகள், தொல்காப்பிய இலக்கண விதிகளுடன் எத்தகைய கால ஒத்திசைவைக் கொண்டுள்ளன என்பதை அடையாளங் காண்பதே இவ்ஆய்வின் முதன்மை நோக்கமாகும். இவ்வாய்வு, இலக்கிய இலக்கணப் பொருத்தப்பாட்டின்வழித் தொல்காப்பியத்திற்கும் ஐங்குறுநூற்றிற்கும் இடையிலான காலத்தொடர்பை மொழியியல் அடிப்படையில் உறுதிப்படுத்துகிறது.

Although Tolkāppiyam is primarily a treatise on poetics, it provides a comprehensive grammatical framework for the Tamil language, spanning from phonology to syntax. A significant aspect of its linguistic description is the categorization of vowels and consonants that are permissible in the word-initial and word-final positions. This research aims to examine the correlation between the word-initial rules prescribed in Tolkāppiyam and their practical application in Aiṅkuṟunūṟu, specifically focusing on the Marutham (riverine) landscape poems. As Aiṅkuṟunūṟu holds a distinct position as the first compiled anthology among the Akam (interior) works of the Sangam era, it serves as an ideal primary source for testing the chronological alignment between classical grammar and literature. By identifying the linguistic parallels between these two works, this study seeks to demonstrate the structural and temporal consistency between the rules of Tolkāppiyam and the poetic conventions of early classical Tamil literature.

Files

3Godwin Sudharsan A_22-30.pdf

Files (480.3 kB)

Name Size Download all
md5:c7e22a826eaba69e1481b1d8203c9757
480.3 kB Preview Download

Additional details

Additional titles

Translated title (English)
Tolkāppiyam: The Initial Letters in Language and the Verses of Ainkurunūru

References

  • இளங்குமரன், இரா. (2018). இலக்கண வரலாறு (7-ஆம் பதிப்பு). மணிவாசகர் பதிப்பகம்.
  • இளவரசு, சோம. (உ.ஆ.). (2004). நன்னூல் எழுத்ததிகாரம். மணிவாசகர் பதிப்பகம்.
  • சாமிநாதையர், உ. வே. (உ.ஆ.). (1949). ஐங்குறுநூறு மூலமும் பழைய உரையும் (4-ஆம் பதிப்பு). அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
  • சுந்தரமூர்த்தி, கு. (ப.ஆ.). (1979). தொல்காப்பியம் எழுத்ததிகாரம்-இளம்பூரணர் உரை. அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.