அகமகளிரின் கலைத்திறன் ஆளுமைகள்
Authors/Creators
Description
தமிழ் இலக்கியங்களில் சங்க இலக்கியங்கள் மிகவும் தொன்மை வா#ந்தவையாகவும் பழமை வா#ந்தவையாகவும் உள்ளன. இத்தகைய சங்க இலக்கியத்தில் அக இலக்கியம் என்று பார்த்தால் தமிழர்களுடைய பண்பாடுகளை நாகரிகங்களை எடுத்துக்கூறும் வகையில் அமைந்தவையாகும். இதில் மகளிரின் ஆளுமைகள் என்பது சங்க அக இலக்கியத்தில் ஒரு கட்டுக்கோப்பான தோற்றத்தைக் கொண்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அகப்பாடல்கள் அக்கால மகளிரின் ஆளுமையை அறிந்துகொள்ள உதவும் ஓர் வரலாற்றுக் கருத்துப் பெட்டகமாகத் திகழ்கின்றன. இதில் கலையின் விளக்கம், மகளிரின் கலையுணர்வு, மகளிரின் விளையாட்டுக்கள், இசைத்திறன், பந்தாடல், மகளிரின் ஒப்பனைக் கலைத்திறன், கூந்தல் ஒப்பனை, முக ஒப்பனை, கண் ஒப்பனை, சமையல் நுணுக்கம், விருந்தோம்பல் இப்படி மகளிரின் கலைத்திறன் ஆளுமைகள் என்ற இக்கட்டுரையில் மகளிரின் ஆளுமையை அறியலாம். சங்க அக இலக்கியத்தில் குறிப்பாக மகளிரின் ஆளுமைகள் அதிகமாக வெளிப்படுகிற வகையில் அமைந்துள்ளது எனலாம். ஆடவர் உடலால் வலிமை பெற்றவர். என்றால் பெண்கள் உடலாலும், உள்ளத்தாலும் வலிமை பெற்றவர்கள் என்பதை அறியும் வகையில் அமைந்துள்ளது. ஆளுமை மனம் சார்ந்தவை. மகளிர் தனக்கான ஆளுமையை மன ஈடுபாட்டினால் வெளிப்படுத்துகிறாள் என்பதை சங்க இலக்கிய பாடல்கள் மூலம் இக்கட்டுரை விளக்கப்படுகிறது.
Files
133-137.pdf
Files
(650.6 kB)
| Name | Size | Download all |
|---|---|---|
|
md5:8d9a60f6eb988e6b8ad51961f44c10bd
|
650.6 kB | Preview Download |