Published August 24, 2017 | Version v1
Book Open

பஞ்சாபிக் கதைகள்

Description

1947ம் ஆண்டு நாட்டுப் பிரிவினை முக்கியமாகப் பஞ்சாபி கதை உலகை வெகுவாகப் பாதித்தது. காரணம், இந்தப் பிரிவினை பாஞ்சால மக்களின் உள்ளத்தையே ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது. சில கதையாசிரியர்கள், முஸாபிர், துக்கல், விர்க், ஸர்னா, ஸத் யார்த்தி, பக்‌ஷீ போன்றவர்கள் மேற்குப் பஞ்சாபை விட்டுக் குடி பெயர்ந்து இங்கு வந்தனர். தனிப்பட்ட முறையிலே மனப்புண் உற்றபொழுதிலும், இந்த எழுத்தாளர்களின் கதைகள் நிலை தடு மாறாமல் தராசு முனையில் நின்று விந்தை புரிந்தன. இந்தக் கதைகளில் வரலாற்றுக் கசப்பு சிறிதளவுகூடக் காணக் கிடைக்க வில்லை. இந்தக் கதைகள் ஒரு கணத்தில் தோன்றியவையாயினும், இவற்றில் பஞ்சாபியரின் வாழ்வு நிலை பிறழாமல் சீரிய வகையில் சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள 'கஸ்மான் கானே,' 'கப்பல்,' 'சவியான் தீருத்,' 'மோதீ' என்ற நான்கு கதை களும் நாட்டுப் பிரிவினையோடு தொடர்பு கொண்டவையாயினும், இடம் பொருள், ஏவல், கால, தேச, வர்த்தமானம் இவற்றுக்கு அப்பாற்பட்டு, முன் பின் விளைவுகளிலிருந்து ஒதுங்கி நிற்பவை. ஒன்று இவற்றின் மீது கசப்புப் பூச்சு அதிகமாகவோ அழுத்தமாகவோ விழவில்லை. அப்படித் தோன்றும் கசப்புக் கூடத் தனது அருகில் காணும் நிகழ்காலச் செயல்களைக் குறித்ததே தவிர ஆழப் பதிந்தவை அல்ல. இந்த அழிவின் முழுப் பொறுப்பையும் ஒரு தரப்பின் தலையில் கட்டும் போக்குக் கூட இக்கதைகளில் காணப்படவில்லை. இது ஆரோக்கியம் மிகுந்த பஞ்சாபியரது இயல்புக்கு ஓர் எடுத்துக் காட்டு. இதனால் தான் பஞ்சாபிக் கதை பஞ்சாபோடு தொடர்பு கொண்டிருந்தாலும், மனிதத் தன்மை முழுவதுடனும் தொடர்பு காட்டுவதாகக் காணப்படுகிறது.

Files

cover.jpg

Files (4.6 MB)

Name Size Download all
md5:090f88f33a525e26977e81c1cfd898eb
425.2 kB Preview Download
md5:4ed26d3a1507d9bad269c5f8719f6f94
1.4 kB Download
md5:1d5292e6cac92fbb846fce1d9cd01cf7
886.7 kB Download
md5:a97b49036a405e462e191bc29fbf205e
335.6 kB Download
md5:512acf8797364db2b7eead9a0110e652
1.0 MB Download
md5:6110042973b90dd3f69d1f16984918ee
1.1 MB Preview Download
md5:71a9663f27dcc08c80f426928167bc04
874.0 kB Download