Book Closed Access

அங்கே இப்போ என்ன நேரம்

அ. முத்துலிங்கம்

நாலு வருடங்களுக்கு முன் சுந்தர ராமசாமி அவர்களை சந்தா குரூஸில் சந்தித்தேன். 'நீங்கள் கட்டுரை எழுதலாம். நீங்கள் படித்து ரசித்த ஆங்கில நூல்களை அறிமுகம் செய்யலாம். உங்கள் அனுபவங்களை, நேர் காணல்களைப் பதிவு செய்யலாம்' என்று சொன்னார். நான் அதை அப்போது பெரிதாக எடுக்கவில்லை. மேற்சொன்ன புத்தகங்களைப் படித்த பிறகு நாமும் அப்படி தமிழிலே எழுதினால் என்னவென்று தோன்றியது. இப்படி வேறு யாரும் தமிழில் செய்திருப்பதாகவும் தெரியவில்லை. அப்படி செய்திருந்தாலும் நான் படித்ததில்லை. சு.ராவுக்கு முதலில் என் நன்றி. அவரே என் மூளையில் இந்த விதையை ஊன்றியவர். நண்பர் ஜெயமோகன் கட்டுரைகளைப் படித்து அவ்வப்போது தன் கருத்துகளைச் சொல்லி உற்சாகப்படுத்தினார். அவரையும் நினைத்துக் கொள்கிறேன். மற்றும் நண்பர்கள், வாசகர்கள் மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி வாயிலாகவும் எனக்கு தந்த ஊக்குவிப்பு மறக்கமுடியாதது. அவர்களுக்கும் நன்றி. இந்த எழுத்துக்கள் காலச்சுவடு, தீராநதி, காலம், உயிர்மை, ஆனந்த விகடன் போன்ற இதழ்களிலும் திண்ணை, உலகத்தமிழ், மரத்தடி, திசைகள் போன்ற இணைய தளங்களிலும் வெளியானவை. இந்த ஆசிரியர்களுக்கு நான் கடமைப் பட்டவன்.

அ.முத்துலிங்கம்

Closed Access

Files are not publicly accessible.

Share

Cite as