Published August 18, 2017 | Version v1
Book Open

திகடசக்கரம்

Description

ஓடும் ரயிலில் இருந்து குதிக்கும் ஒருவன் இறங்கிய பின்னும் ரயிலுடன் சிறிது தூரம் ஓடுகிறான் அல்லவா! அதுபோல, ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓடவேண்டும். சிறுகதையின் முழுமை அவன் சிந்தனை ஓட்டத்தில்தான் நிறைவேற வேண்டும். ஒரு உண்மையான சிறுகதை அது முடிந்த பிற்பாடு தான் தொடங்குகிறது. இது என்னுடைய சித்தாந்தம். இங்கே சொல்லிய சிறுகதைகள் அத்தனையும் உண்மையையும், கற்பனையையும் கலந்து கொடுத்தவை. சிலவற்றில் உண்மை கூடியும் கற்பனை குறைந்தும் இருக்கும்; மற்றவற்றில் கற்பனை கூடியும் உண்மை குறைந்தும் நிற்பதைக் காண்பீர்கள். இந்தக் கதைகளில் நான் சந்தித்த மனிதர்களையும், பார்த்த இடங்களையும், அவதானித்த பழக்க வழக்கங்களையும் பின்னணியாக வைத்து எழுதியிருக்கிறேன். எல்லாவற்றிலும் மனித மேம்பாட்டுக்கான ஏதோ ஒன்று மறைந்திருக்கும் . இது இந்தக் காலத்தில் அவசியமான ஒன்றாக எனக்குப் பட்டது. போதைப் பாருள் அடிமைத்தனம், சுற்று சூழல் அறிவு, விலங்கினங்கள் பராமரிப்பு இப்படியான சிலவற்றை மறை முகமாக கோடி காட்டிச் சென்றிருக்கிறேன். என் மனத்திலே வெகு காலமாகப் போராடிக் கொண்டிருந்த இந்தக் கருத்துக்களை உங்களுடன் இக்கதைகள் மூலம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. வாசகர்களுடைய மதிப்பீட்டை அறிய ஆவலாயிருக்கிறேன்.

அ. முத்துலிங்கம்

Files

cover.jpg

Files (5.0 MB)

Name Size Download all
md5:32ab0a2c7d0e3a0677558595fb26dbd7
685.0 kB Preview Download
md5:d4dbcb36861803f31b49a9ba2c4ab562
1.5 kB Download
md5:e495adef63b3d4afc2695b281597a237
896.0 kB Download
md5:1ef913c0f1a29321a0a4e2c3982ed98d
607.8 kB Download
md5:5d129c19375fa8956ed2ff679b8046b6
1.5 MB Download
md5:0e5f9944b33a178412144ca30d9cf8f3
443.2 kB Preview Download
md5:d12d87c459fa53f828ceac8c4f5fd434
889.5 kB Download