Book Open Access
ஆழ்வார்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது.
கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்.
இந்தப் பாடல்கள் அனைத்தும் பெருமாளையும் , அவரது பல்வேறு அவதாரங்களையும் குறித்து அமைந்துள்ளன. பெரும்பாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில், சுமார் 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் இயற்றப்பட்டதாகும். இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும். இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து நாலாயிரம் என்பர். இவற்றுள் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்களாகும்.
பாடல்களின் பட்டியல்:
1. முதலாயிரம்:
* பெரியாழ்வார் -- திருப்பல்லாண்டு (1 - 12), திருமொழி (13 - 473)
* ஆண்டாள் -- திருப்பாவை (474-503), நாச்சியார் திருமொழி (504-646)
* குலசேகர ஆழ்வார் -- பெருமாள் திருமொழி (647 - 751)
* திருமழிசையாழ்வார் -- திருச்சந்தவிருத்தம் (752 - 871)
* தொண்டரடிப்பொடியாழ்வார் -- திருமாலை (872 - 916), திருப்பள்ளி எழுச்சி (917 - 926)
* திருப்பாணாழ்வார் -- அமலனாதிபிரான் (927 - 936)
* மதுரகவியாழ்வார் -- கண்ணிநுண்சிறுத்தாம்பு (937 - 947)
2. இரண்டாவதாயிரம்:
* திருமங்கையாழ்வார் -- பெரிய திருமொழி (948 - 2031), திருக்குறுந்தாண்டகம் (2032 - 2051), திருநெடுந்தாண்டகம் (2052 - 2081)
3. மூன்றாவதாயிரம்:
* பொய்கையாழ்வார் -- முதல் திருவந்தாதி (2082 -2181)
* பூதத்தாழ்வார் -- இரண்டாம் திருவந்தாதி (2182 - 2281)
* பேயாழ்வார் -- மூன்றாம் திருவந்தாதி (2282 - 2381)
* திருமழிசை ஆழ்வார் -- நான்முகன் திருவந்தாதி (2382 - 2477)
* நம்மாழ்வார் -- திருவிருத்தம் (2478 - 2577), திருவாசிரியம் (2578 - 2584), பெரிய திருவந்தாதி (2585 - 2671)
* திருமங்கை ஆழ்வார் -- திருஎழுகூற்றிருக்கை (2672), சிறிய திருமடல் (2673 - 2712), பெரிய திருமடல் (2713 - 2790)
4. நான்காவதாயிரம்:
* நம்மாழ்வார் -- திருவாய்மொழி (2790 - 3892)
* திருவரங்கத்தமுதனார் -- இராமானுச நூற்றந்தாதி (3893 - 4000)
(விக்கிப்பீடியாவில் இருந்து.)
இந்த இ-புத்தகத்தின் மூலப்படி, "Project Madurai"ன் வலைமனையில் இருந்து எடுத்தாளப்பட்டது.
Name | Size | |
---|---|---|
cover.jpg
md5:1358c7e61da8cdc6382c2fdddce4c68b |
343.4 kB | Download |
metadata.opf
md5:d05c37e5ff36f630c50401c105b3e551 |
1.2 kB | Download |
Naalayira divyaprabandham - Azvaarkal.azw3
md5:68d0d38aa62e653048706d012df594fc |
1.3 MB | Download |
Naalayira divyaprabandham - Azvaarkal.epub
md5:729b9ed32a11b5ee44517c488b2f495a |
588.6 kB | Download |
Naalayira divyaprabandham - Azvaarkal.htmlz
md5:a41264cf4112e656e05aa04660d8e0de |
1.1 MB | Download |
Naalayira divyaprabandham - Azvaarkal.md
md5:e4bb2df6ab516026f2683cd6b49ac260 |
2.1 MB | Download |
Naalayira divyaprabandham - Azvaarkal.mobi
md5:f136d8768fb9263b8cd0ac55e0d125c6 |
1.2 MB | Download |
All versions | This version | |
---|---|---|
Views | 3,507 | 3,512 |
Downloads | 819 | 821 |
Data volume | 340.2 MB | 340.9 MB |
Unique views | 3,169 | 3,174 |
Unique downloads | 777 | 779 |